மே தினம் – சிறப்பு ஏற்பாடுகள்

574 0

மே தினத்தின் பொருட்டு விசேட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள காவல்துறையினரின் ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ள மே தின கூட்டங்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்களுக்காக சுமார் 8 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மே தினத்திற்கான பேரணிகள் மற்றும் கூட்டங்களின் பொருட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் 15 கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்த முறை மே தினத்தை கொண்டாட உள்ளனர்.

இதன்படி, கொழும்பின் பிரதான மே தின கூட்டம் இடம்பெறும் கெம்பல் மைதானம், காலி முகத்திடல், பீ.ஆர்.சி மைதானம், ஸ்டேன்லி ஜேன்ஸ் விளையாட்டு மைதானம் ஒள்ளிட்ட இடங்களில் 15களில் விசேட போக்கு வரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன்படி, வழி இலக்கம் 138 மஹரகம – புறக்கோட்டை, வழி இலக்கம் 154 கிரிபத்கொட – அங்குலான, வழி இலக்கம் 176 நுகேகொட – ஹெட்டியாவத்தை, வழி இலக்கம் 103 பொல்லை – கோட்டை ஆகிய பாதைகளில் பயணிக்கும் பேரூந்துகளுக்காக நாளை தினம் மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கண்டி வீதியில் கொழும்புக்கு உள்நுழையும் சகல வாகனங்களும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தின் ஹிங்குருகொட சந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க சுற்றுவட்டம் ஊடாக ஆமர் வீதி ஊடாக புறக்கோட்டையை வந்தடையலாம்.
காலி வீதியில் கோட்டையில் இருந்து தெஹிவளை வரையிலும், ஸ்ரீஜயவர்தனபுற வீதியில் வெலிகடையில் இருந்து பொரல்லை வரையிலும் வாகன போக்கு வரத்து வழமையான முறையில் இடம்பெறும்.

இதனிடையே இன்று நள்ளிரவு முதல் கொழும்பு வீதிகள் பலவற்றில் வாகனங்களை நிறுத்த இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சில வீதிகள், மே தின பேரணிகள் இடம்பெறும் வேளைகளில் சிற்சில சமயங்களில் மூடப்படும் எனவும் சில இடங்களில் வாகன போக்குரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் இடம்பெறும் மே தின பேரணி மற்றும் கூட்டம் காரணமாக நாளை காலை 6 மணி தொடக்கம் கன்னொருவ வீதி மற்றும் கண்டி – பேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க வீதி முற்றாக மூடப்பட்டிருக்கும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதுபோல் கொழும்பில் இருந்து கண்டிக்குள் உள்நுழையும் மற்றும் கண்டியில் இருந்து வெளியேறும் வாகனங்களுக்காக மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.