சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்தவர் சிவராம்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

261 0

மாமனிதர் தராகி சிவராம் சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தராகி சிவராமின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ´தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்´ என்னும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை, கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம் நினைவுரை நிகழ்த்தினார்.

அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் சிவாராம் என்னும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உரையாற்றினார்.