களு கங்கைக்கு சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரே முதலை இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பெண்ணை தேடுவதற்கான நடவடிக்கைகளை அப்பகுதி மக்கள் ஆரம்பித்துள்ளதோடு களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

