பாணந்துறை, ஹொரேதுடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் மொரட்டுவை எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

