வவுனியாவில் 3 பெண்கள் கைது

117 0

வவுனியாவில்  தவறான தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் இன்று(22) தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட மது ஒழிப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தவறான தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 – 30 வயதுக்கு உட்பட்ட கைது செய்யப்பட்டவர்களாவர்.மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.