கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவில் வலைப் பயிற்சி

87 0
கண்டி  உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவில்  வடமேல் மாகாணத்தில் உள்ள நாரம்மல பிரதேச சபைக்கு கிரிக்கெட்  வலைப் பயிற்சி திடல் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதனை கண்டி  உதவி இந்திய உயர்ஸ்தானிகர்  வீ.எஸ். சரண்யா ஆரம்பித்து வைத்தார்.

இளைஞர் யுவதிகளிடையே விளையாட்டு ஈடுபாடுகளை  ஊக்குவிக்கும் வகையிலும் கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரகத்தின்  நல்லெண்ணத்தை  வடமேல் மாகாணத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் இது வழங்கப்பட்டுள்ளது.

கலாச்சாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர்  எம்.ஏ.ஆர். சுதர்ஷனி, விளையாட்டுப் பணிப்பாளர் எம்.டி.என். கருணாசேன உற்பட அரச அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.