வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் சுங்க வரிகள் மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன

