உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை : அறிவித்த ஐரோப்பிய நாடு

163 0

உக்ரைனுக்கு (Ukraine) படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் போலந்துக்கு (Poland) இல்லை என அந்நாட்டு பிரதமர் டொனால்ட் தஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை வார்சாவுக்குச் சென்றிருந்த பிரான்ஸ் (France) ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் (Emmanuel Macron) நடந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் தஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே தற்போதைய சூழலில் உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமேதும் போலந்துக்கு இல்லை என்பதை பிரதமர் தஸ்க் விளக்கியுள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டால் ஐரோப்பிய துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்பும் யோசனை அவர்களின் திட்டத்தில் இருக்கும் என்று முக்கிய அதிகாரிகள் தரப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.