இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஐந்து பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

