ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரைத் தாக்கியது யார்?

118 0

பத்தரமுல்ல இசுருபாய கட்டிடத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரே காரணம் என்று கூறப்படும் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு (SIU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

டிசம்பர் 2 ஆம் திகதி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, ​​பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமைதியின்மையின் போது மூன்று அதிகாரிகள் கூர்மையான ஆயுதத்தால் காயமடைந்தனர்.

எவ்வாறாயினும், இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரே காயங்களுக்கு காரணமானவர் என தலங்கம பொலிஸார் கடுவெல நீதவானிடம் அறிவித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.