வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதாவுல்லா மனு

119 0

திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என்று கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா மனு ஒன்றின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்