இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்து வரும் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனம் நிதி உதவி அளிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அந்த நிதியுதவி தேவையில்லை என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைகத்தில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) எனப்படும் ஆழ்கடல் கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் இயக்கத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றின் கூட்டமைப்பினால் CWIT உருவாக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கு அமெரிக்காவின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (US IDFC) 553 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்க கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், அமெரிக்க நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் வெளியேறியுள்ளது.

