“உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின், 4 வயது மகன் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டிரம்பின் நிர்வாகத்தில், அரசாங்க செயல்துறையின் தலைவராக எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
காரில் பயணம் செய்தபோது எலான் மஸ்க் தனது 4 வயது குழந்தையிடம் அரசியல் பற்றி பேச்சு கொடுக்கிறார்.
பொறுப்பேற்க இருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? என்று தனது மகனிடம் கேட்கிறார்.
அதற்கு சற்றும் யோசிக்காமல் “அமெரிக்காவை காப்பாற்றுங்கள் ” என்று சிறுவன் பதிலளிக்கிறான்.
“அப்புறம் ” என்று அவர் கேட்டபோது, “டிரம்பிற்கு உதவுங்கள் ” என்கிறான் சிறுவன்.
அதற்கு எலான் மஸ்க், ‘சரி’ என்று ஆமோதிக்கிறார்.
10 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட அது அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானது.
இதுவரை 3.4 கோடி பேர் வீடியோவை ரசித்து உள்ளனர்.
https://x.com/i/status/1865949328906256794

