இயேசு சபை துறவி அருட் தந்தை மேயர் அடிகளாரினால் 1972 ஆம் ஆண்டு புளியடிக் குடா புனித செபஸ்தியார் ஆலய கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மேயர் கலாசார மண்டபம் 52 ஆண்டுகளுக்குப் பின்னர், புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
நவீன மண்டபத்தை, கிழக்கு மாகாண மேலாளரும், இயேசு சபை துறவி அருட் பணி சுஜிவ பத்திரண மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மேயர் கலாசார மண்டபத்தில் முதல் நிகழ்வாக, திருவருகைக் கால ஒளி விழா நிகழ்வு நடைபெற்றது.

