இதன்போது குறித்த டிப்பர் கொடிகாமம் ஊடாக மந்துவில் பகுதியால் டிப்பர் தப்பிச் சென்று கொண்டிருந்ததவேளை மண்ணை வீதியில் கொட்டி விட்டு, சாவகச்சேரி – கைதடி வீதியால் செல்லும்போது அவ்விடத்தில் வைத்து டிப்பருடன் சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

