ரிட் மனுவை வாபஸ் பெற்றார் லொஹான்

83 0

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பதிவு செய்யப்படாத வாகன வழக்கில் தனது கட்சிக்காரர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதால், மனுதாரர் மனுவைத் தொடர விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.