ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
இதற்கான விட்டுக்கொடுப்பை ரணில் விக்ரமசிங்க செய்யாதவரை இணைவு என்பது சாத்தியப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

