சந்தேகத்துக்கிடமான முறையில் யானை உயிரிழப்பு

118 0
அநுராதபுரம், மின்னேரியா, ரொட்டவெவ வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

25 வயது மதிக்கத்தக்க 08 அடி உயரமுடைய யானையே உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த யானையின் தந்தங்கள் 04 அடி 04 அங்குலம் உயரமுடையது ஆகும்.

இந்த யானை சுமார் 25 வருடங்களாக மின்னேரியா மற்றும் கவுடுல்ல ஆகிய தேசிய பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.