மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து ; இருவர் காயம்

131 0
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் அந்தரவெவ சந்திக்கு அருகில் மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகளவிலான மரப்பலகைகளை ஏற்றிச் சென்றதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது டிப்பர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.