மார்க்​சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்​துவ​மனையில் அனுமதி

20 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த கே.பாலகிருஷ்ணனுக்கு கடந்த 2 நாட்களாக தொண்டை வலி, நெஞ்சு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு காது, மூக்கு, தொண்டை நல மருத்துவர்கள், பொது நல மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.