அமெரிக்காவும் சீனாவும் கைதிகளை பரிமாற்றிக்கொண்டது

17 0

கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பைடன் நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் தலா மூன்று கைதிகளை பரிமாற்றிக் கொண்டன.

அமெரிக்க காவலில் உள்ள மூன்று சீன பிரஜைகளும் விடுவிக்கப்பட்டதை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சு வார்த்தை பல மாதங்கள் இடம்பெற்று வந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீன அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சியால், அமெரிக்காவால் தவறாகக் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் மூவரும் பாதுகாப்பான முறையில் தங்கள் நாட்டிற்கு திரும்பியதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக அமெரிக்காவால் சீன பிரஜைகளை அடக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் சீனா எதிர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் பெருவில் நடந்த அபெக் உச்சிமாநாட்டின் போது சீனாவில் தவறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிடம் எடுத்துரைத்ததன் பின்னர் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தம் பைடனின் இறுதி பதவி காலத்தின் போதான இராஜதந்திர வெற்றியைக் குறிக்கிறது.