கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன

130 0

26ஆம் திகதி இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக வந்த 03 விமானங்கள் இந்தியாவின் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

ஜப்பானின் நரிட்டா, டுபாய் மற்றும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்களே இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சென்னை, மாலே மற்றும் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த மேலும் 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.