ரோயல் பார்க் கொலையாளியை விடுதலை செய்வதற்கு இஞ்சம் பெற்றாரா?

133 0
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடமிருந்து இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.

ரோயல்பார்க் கொலையாளிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முன்னாள்  ஜனாதிபதி இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள்ஜனாதிபதி இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் இலஞ்சம் பெற்றுக்கொண்டனர் என 2022 இல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.