சீரற்ற வானிலையால் யாழ் கல்வி வலயத்தில் இரு பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்!

128 0
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை நாளை புதன்கிழமை  (27 )  மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை (28) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.