முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

14 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில்,

“கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் இந்த காரை வீட்டின் கராஜில் நிறுத்தி வைத்தார்” என தெரிவித்துள்ளனர்.

பின்னர், இந்த காரானது மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.