செவனகலயில் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

14 0

மொனராகலை, செவனகல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 100 கோடி ரூபா ஆகும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.