காதலியைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய காதலன் கைது

16 0

அநுராதபுரம் நகரத்தில் கும்பிச்சங்குளம் வாவிக்கு அருகில் தனது காதலியைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய காதலன் ஆவார்.

அதே பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய காதலியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்த காதலி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கத்தி மற்றும் விஷ போத்தல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான காதலன் தனது காதலியை கொலை செய்துவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.