மாத்தறையில் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

18 0

திருத்தப்பணிகள் காரணமாக மாத்தறையில் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (31)  நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை  7.00 மணி வரை 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மெத்தவத்த, ரஸ்ஸன்தெனிய, கெகனதுர , வெஹெரஹேன, நாவிமன, யட்டியன வீதி, தெவிநுவர, கந்தர, தல்பாவில, கன்தகோடெல்ல,பானார மற்றும் நில்லவெவ ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.