வேகமாகப் பரவி வரும் சின்னம்மையை கட்டுப்படுத்த அம்மைத்தடுப்பூசி வேலைத்திட்டம்!

18 0

வேகமாகப் பரவி வரும் சின்னம்மையை கட்டுப்படுத்த அம்மைத்தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில்  அம்மைத்தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   

இது தொடர்பில் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

20-30 வயதுக்கிடைப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை பெறாத, ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்ற, தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான உரிய சான்றுகளற்ற அனைவருக்கும் இந்த   தடுப்பூசி வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட12 மாவட்டங்களில் 206 மருத்துவ அதிகாரப் பிரிவுகளின் கீழ் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படஉள்ளது.

9 மாதங்களுக்கு மேற்பட்ட, 19 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுக்கும் சின்னம்மை தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.