கொழும்பிற்கோ நாட்டின் ஏனைய பகுதிகளிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை

105 0

அறுகம் குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் என்பது ஓக்டோபர் ஏழாம் திகதியே தகவல் கிடைத்திருந்தது,நாட்டில் வெளிநாட்டு பிரஜைகளை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன. என பொலிஸ் பேச்சாளர்நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இதனை தொடர்ந்து  அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்த பகுதியில் 500 பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பிற்கோ நாட்டின் ஏனைய பகுதிகளிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல்  என புலனாய்வு தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக மக்கள் அச்சமடையவேண்டியதில்லை.