யேர்மனி நூர்ன்பேர்க் நகரில் நினைவெளிர்ச்சி வணக்க நிகழ்வு- 13.10.2024.

326 0

13.10.2024 அன்று நூர்ன்பேர்க் நகரில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ம் லெப்ரினன் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெளிர்ச்சிநாள் பொதுச்சுடர், தேசியக்கொடியற்றல்,
ஈகைச்சுடர், மாலையிடல், அகவணக்கத்துடன் ஆரம்பித்து தாயகக்கனவுகளோடு கூடிய இசைவணக்கம் , கலைநிகழ்வுகள் மற்றும் ஜேர்மன் கிளையின் தாயகநலன்காப்புப் பொறுப்பாளர் திரு.றாஜன் அவர்களின் மாவீரர்களின் வரலாற்றுச் சுருக்கமும் தமழீழமக்களின் தற்போதைய நிலையில் காத்திரமான பங்களிப்பைச் செய்யமாறும், ஜேர்மன் கிளை தமிழீழமண்ணில் வாளும் மக்களுக்காக ஆற்றிவரும் நிவாரணப்பணிகளையும் விளக்கி ஒருபேருரையையும் வளங்கியிருந்தார்.

இறுதியாக தேசியக்கொடி இறக்கத்துடன் நம்புங்கள் தமிழீழம்நாளை பிறக்கும் என்ற பாடலுடன், தாரகமந்திரமான தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்னும் மந்திரத்தை அனைத்து மக்களும் ஓங்கி ஒலித்தபடி இனிதே நிறைவுபெற்றது.