தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும், பன்னிரு வேங்கைகளின் நினைவு எழுச்சி நாளும்-பெல்சியம்.

61 0

அக்கினி பிளம்பின் ஒளியில் பெண்ணியம் காத்திட தமிழீழத் தேசியத்தலைவரின் வழியில் இணைந்து களமாடியவள். 1987.10.10.கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில் விழுப்புண் அடைந்து பின் சயனற் வில்லை அருந்தி களப்பலியான முதல் ஈழமங்கை 2ம் லெப் மாலதி அவர்களதும் .

இந்திய இலங்கை உடன்படிக்கை காலத்தில் தாயகக்கடற்பரப்பில் பயணம் செய்த வேளையில், கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ முகாமில் இருந்து கொழும்புக்கு நயவஞ்சகமாக ஏற்றமுற்பட்ட வேளையில் கொள்கை மரபிற்கிணங்க பற்றுறுதியுடன் சயனட் உட்கொண்டு வீரகாவியமான 12வேங்கைகளின் நினைவெழுச்சி நாளானது, பெல்சியம் நாட்டின் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் 13.10.2024 அன்று உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.