மனித உரிமை பேரவை தீர்மானம் – அமெரிக்கா தெரிவித்திருப்பது என்ன?

151 0
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தினை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மிச்செலே டெய்லர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் முக்கிய பணிகளையும் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் ஊழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான திட்டங்களையும் தொடர்வதற்கு தீர்மானித்தது.

இந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து தொடர்ந்தும் ஈடுபாட்டை பேணுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.