கண்டி, திகன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக மெனிக்ஹின்ன பொலிஸார் தெரிவித்தனர்.
மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெனிக்ஹின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

