வவுனியா பல்கலைக்கழகத்தில் சுகவாழ்வு நிகழ்வு

130 0

இந்திய இலங்கை நட்புறவுக் கழக அனுசரணையுடன் வவுனியா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் சுக வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு  இன்று செவ்வாய்க்கிழமை (08)  வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் அகில உலக வர்ம அறிவியல் ஆராய்ச்சி நிறுவன முனைவர் பேராசிரியர் ரி. இராஜேந்திரன் சிறப்பு பேருரையாற்றியிருந்தார்.

பேராசிரியர் ஏ.நந்தகுமாரன் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணை தூதுவர் ஸ்ரீ வி ராம் மகேஷ் மற்றும் பல்கலைக்கழக வியாபார கற்கைகள் பீடத்தின் பீட்திபதி வை.நந்தகோபன், வளர்வார்கள்,  மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்.

இதன்போது வர்மக்கலை தொடர்பான பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.