ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய பதில் ஆணையாளர் நாயகம் நியமனம்

134 0

ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவி செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியிலிருந்து வெற்றிடமாக இருந்தது.

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.