இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி குடும்பத்துடன் பலி

26 0

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது.

இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு லெபனான் நகரமான திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான சயீத் அட்டால்லா கொல்லப்பட்டார். அவருடன் குடும்பத்தினர் 3 பேரும் உயிரி ழந்தனர். மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஜாஹி யாசர் ஓபி உள்பட 8 பேர் பலியானார்கள்.