பொதுத் தேர்தல் ; வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் பட்டாசு கொளுத்த தடை – பிரதி பொலிஸ் மா அதிபர்

17 0

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் பட்டாசுகளை கொளுத்தி மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.