யாழில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

21 0

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  யுவதியொருவர் நேற்று (04) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

காய்ச்சல் காரணமாக இந்த யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.