ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு!

17 0

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு பாடசாலை வளாகத்தில் அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது.

இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே. வஹாகப் தீனின்  வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் சங்கீதக் கதிரை, ஊசிக்குள் நூல் கோர்த்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.ஏ கமறுன்நிஷா, ஐ.ஏ. ஜுமான், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.