சீனாவின் ஷங்காய் நகரில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் பலி

13 0

சீனாவின் சங்காய் நகரின் வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

சீன நேரப்படி திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

15 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள சீன பொலிஸார் லின் என பெயர்கொண்ட 37 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்,என தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தனது தனி;ப்பட்ட பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக சங்காய் வந்துள்ளார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகரின் தென்மேற்கு பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் சொங்ஜியாங் என்ற பகுதியில் உள்ள வணிகவளாகத்திலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இப்பகுதியில் பல பல்கலைகழகங்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் மருத்துவமனையில் காயங்கள் காரணமாக உயிரிழந்தனர் என தெரிவித்துள்ள பொலிஸார் ஏனையவர்களிற்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எங்கும் இரத்தம் காணப்பட்டது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

லுடு இன்டநசனல் கொமேர்சியல் பிளாசாவில் நகைகடை வைத்திருக்கும் சி என்பவர் பெருமளவு விசேட படைப்பிரிவினரும் தீயணைப்பு படையினரும் திடீர் என உள்ளே வந்து அனைவரையும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது திடீர் என மக்கள் பதற்றத்துடன் ஓடுவதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.