தியாகதீபம் லெப்கேணல் திலீபன் ,கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு-பெல்சியம்.

64 0

தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்களது 37வது ஆண்டும்,கேணல் சங்கர் அவர்களது 23வது ஆண்டு நினைவெழிச்சி நாளும்.

தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே
வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபனதும்.

முப்படை கட்டிய எங்கள் தேசியத்தலைவரின் செயலுக்கு செயல் வடிவம் கொடுத்து சிறீலங்கா இராணுவத்தின் அதிநவீன தொழிநுட்பங்களில் சிக்காமல் மண்ணைத்தூவி சிறீலங்கா இராணுவத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்திய வான் புலிகளை வழிநடத்திய வீரத்தளபதி கேணல் சங்கர் அவர்களதும் நினைவெழிச்சி
நாளானது 29.09.2024 அன்று பெல்சியத்தில் அன்ற்வேற்பன் என்னும் இடத்தில் சிறப்பான முறையில் மக்கள் எழிச்சியுடன் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.