பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ”வின் முக்கிய உதவியாளருடன் தொடர்புகளை பேணியவர் கைது

131 0

பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ”வின் முக்கிய உதவியாளரான “தொட்டலங்க சானா” என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மீகஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மீகஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.