தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழத் தேசியத்தலைவரது 70 ஆவது அகவைநாளை முன்னிட்டுநடாத்தும் மேதகு 70 போட்டிகள்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70 ஆவது அகவையைச்
சிறப்பித்து ~மேதகு 70 என்ற கருப்பொருளோடு……..
1. தமிழீழத் தேசியத் தலைவரது பண்புகள், ஆளுமைகள், தனித்தன்மைகள்,
வழிகாட்டல்கள் போன்றவற்றை எமது இளந்தலைமுறையினர் அறிதல்.
2. தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரது வழிநடத்தலும் பற்றிய
பார்வையை வெளிக்கொணர்தல்.
3. தமிழீழ நடைமுறை அரசைத் தமிழீழத் தேசியத்தலைவர் கட்டியெழுப்பிய
வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்திச் செல்லுதல்.
4. அவற்றைப் பதிவுசெய்தலும் ஆவணப்படுத்தலும் வெளிக்கொண்டு வருதலும்.
5. இவற்றை அறியவேண்டுமென்ற தன்னார்வத்தேடலை உருவாக்குதல்.
எனும் நோக்கங்களுடன் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் –
அனைத்துலகத் தொடர்பகத்தினால் அனைத்துலக ரீதியில் வரைதல் (ஓவியம்),
குறுகிய ஆவணக்காணொளி ஆக்கம், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் ஆகிய
போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இப்போட்டிகளுக்கான விதிமுறைகள், விண்ணப்பப்
படிவம் என்பன இணைக்கப்பெற்றுள்ளன. ஆர்வமுள்ள அனைவரும் இப்போட்டிகளில்
பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளிற்கான தொலைபேசி எண்:
இ. அருண்முகிலன் 0033 782 744 980
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம்.