அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய இவர் பொலிஸ் சேவையில் 36 வருட காலம் அனுபவமுள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் முதன்முதலாக பொலிஸ் கான்ஸ்டபிளாக தனது சேவையை ஆரம்பித்துள்ளார்.
இவரது நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

