கொழும்பில் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பபாபுள்ள வீதி பகுதியில் 10 கிராம் 720 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் 10 கிராம் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

