யானையின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி

128 0

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட சம்பவம்  ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு  வீதியால்  பாடசாலைக்கு  சென்று கொண்டிருந்த போது  புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் இரண்டு யானை  வீதியை வழிமறித்து ஆசிரியரின்  மோட்டார் சைக்கிளை தூக்கி  எறிந்ததோடு குறித்த ஆசிரியரையும்  தாக்கிவிட்டு சென்றுள்ளது.

அதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் காயங்களோடு முல்லைத்தீவு  மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் முள்ளியவளையை சேர்ந்த 28 வயதுடைய உடையார்கட்டு குரவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.