இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஸ்தாபிக்கப்படும் என்றும், நீதிபதி நவாஸ் ஆணைக்குழு அறிக்கையின்படி செயற்பட்டு, எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாணப்படும் என தெரிவித்தார்.

