கித்துல்வல கினிதம்மமன சந்தியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றின் பெயர்ப் பலகைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹீதிவல கிராமத்தில் உள்ள அலுவலகத்தின் பெயர்ப்பலகைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு கட்சி அலுவலகத்தின் பெயர்ப் பலகைகளும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்து தீப்பெட்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹீதிவல பகுதியில் எரிக்கப்பட்ட இரண்டு கட்சி அலுவலகங்களுக்கு அருகில் வைத்து கையால் எழுதப்பட்ட சில சுவரொட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகள் பொலிஸ் விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

