மஹியங்கனையில் கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; நால்வர் படுகாயம்

110 0

மஹியங்கனை, தம்பராவ பகுதியில் சனிக்கிழமை (14) பகல் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் காரும் முச்சக்கரவண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், நால்வர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.